/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீருடன் கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு ரூ.51,000 அபராதம்
/
மழைநீருடன் கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு ரூ.51,000 அபராதம்
மழைநீருடன் கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு ரூ.51,000 அபராதம்
மழைநீருடன் கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு ரூ.51,000 அபராதம்
ADDED : செப் 12, 2025 02:44 AM

ஆவடி,
ஆவடி, கோவில்பதாகை பிரதான சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயில், சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு கொடுத்த ஏழு வீடுகள், 10 கடைகளுக்கான இணைப்பை மாநகராட்சி துண்டித்தது. அதோடு, 51,000 ரூபாய் அபராதமும் விதித்தது.
ஆவடி, கோவில்பதாகையில், கலைஞர் நகர், பூம்பொழில் நகர், மங்களம் நகர், எம்.சி.பி., நகர், கிருஷ்ணா அவென்யூ, செகரட்டரி காலனி உள்ளிட்ட 15 நகர்களில், 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
மழை காலத்தில், வெள்ள பாதிப்பை தவிர்க்க, 2023 - 24ம் ஆண்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில், 21.70 கோடி ரூபாய் மதிப்பில், சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
கடந்த 30ம் தேதி, ஆவடியில் பெய்த கனமழையால், மழைநீர் வடிகால்வாயில் தேங்கி நின்ற கழிவுநீர், வெள்ளத்தில் அடித்துச் சென்றது. அப்பகுதிகளில் குடியிருப்பை சுற்றி கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசியது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கடந்த 31ம் தேதி காலை, கோவில்பதாகை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சுக்கு பின், அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து, கோவில்பதாகை பிரதான சாலையில், மழைநீர் வடிகால்வாயில், சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த, ஏழு வீடுகள் மற்றும் 10 கடைகளின் இணைப்புகளை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று துண்டித்தனர்.
அவர்களுக்கு, 51,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இன்று காலை, மீண்டும் பணி தொடரும் என, ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா தெரிவித்துள்ளார்.