/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமணியில் வடிகால் கட்ட ரூ.7 கோடியில் மதிப்பீடு
/
தரமணியில் வடிகால் கட்ட ரூ.7 கோடியில் மதிப்பீடு
ADDED : டிச 27, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தரமணி, அடையாறு மண்டலம், 178வது வார்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அருகில் உள்ள தரமணி பகுதியில், மழையில் வெள்ள பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குடியிருப்புகளில் வெள்ளம் புகுவதை தடுக்க, குறிப்பிட்ட தெருக்களில் வடிகால் கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது.
இதன்படி, மசூதி தெரு, பிள்ளையார் கோவில் தெரு, புத்தர் தெரு, அண்ணா திடல் சாலை, ராஜாஜி தெருவில், 4.5 கி.மீ., துாரம் வடிகால் கட்டப்பட உள்ளது.
இதற்காக, 7.32 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
வடிகால் கட்டும் பணி விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.

