/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குடிநீர் வாரிய இடத்தில் தொடர் அலட்சியம்
/
திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குடிநீர் வாரிய இடத்தில் தொடர் அலட்சியம்
திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குடிநீர் வாரிய இடத்தில் தொடர் அலட்சியம்
திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குடிநீர் வாரிய இடத்தில் தொடர் அலட்சியம்
ADDED : ஜன 02, 2024 12:45 AM

ஐ.சி.எப்., குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான காலிமனையில் அத்துமீறி திறந்த வெளியில் குப்பைகளை கொட்டி எரிப்பதால், ஐ.சி.எப்., முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில், வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலை உள்ளது. இங்கு ஒரு புறத்தில், வில்லிவாக்கத்தில் இருந்து, ஐ.சி.எப்., மற்றும் அண்ணா நகரை நோக்கி செல்லும் பாதையும், மற்றொரு புறத்தில் அண்ணா நகரில் இருந்து, வில்லிவாக்கம், பாடியை நோக்கி செல்லும் இரு பாதைகள் உள்ளன.
இதில், பாடியை நோக்கி செல்லும் பாதையின் சாலையோரம் ஐ.சி.எப்., ரயில்வேவுக்கும், வில்லிவாக்கத்தில் இருந்து, அண்ணா நகரை நோக்கி செல்லும் சாலையோரம் குடிநீர் வாரியத்திற்கும் செந்தமான இடங்கள் உள்ளன.
இங்கு, வில்லிவாக்கம் முதல் ஐ.சி.எப்., மற்றும் அயனாவரம் வழியாக குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் ராட்சத குழாய் செல்கிறது. இதனால், காலிமனையாக உள்ள இந்த குடிநீர் வாரிய இடத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தடுப்பு வெளி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, போதிய பராமரிப்பு இல்லாததால் சீர்கேடு நிலவுகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது :
நியூ ஆவடி சாலையோரம், அயனாவரம் பகுதியில், குடிநீர் வாரிய இடம் உள்ளது. இங்கு பராமரிப்பு இல்லததால், வில்லிவாக்கம் முதல் அயனாவரம் வரை மூன்றுகிலோ மீட்டர் துாரம் காடுபோல் காட்சியளிக்கிறது.
குறிப்பாக, தடுப்பு வெளி அமைக்கப்படாத வாரியத்தின் இடத்தில் அத்துமீறல் நடக்கிறது. அங்கு, குப்பைகள் கொட்டப்பட்டு குவிக்கப்பட்டுகிறது. அதுமட்டுமினறி, குப்பைகளை எரிப்பதால் எழும் புகை காற்றில் கலந்து சுவாசிக்கும் போது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பகுதியை சுற்றியுள்ள இடங்களிலும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை. தொடர்ந்து குடிநீர் வாரிய இடத்தில் அட்டூழியம் நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

