/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாணிப கழக பொது மேலாளரை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்
/
வாணிப கழக பொது மேலாளரை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்
வாணிப கழக பொது மேலாளரை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்
வாணிப கழக பொது மேலாளரை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்
ADDED : டிச 23, 2025 05:10 AM

கோயம்பேடு: கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெட்ரோ ரயில் தலைமை அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதன் பொது மேலாளர் ராதாகிருஷ்ணனின் செயல்பாட்டை கண்டித்து, இம்மாதம் 18ம் தேதி, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'பணியின்போது பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தையில் பேசுகிறார். விடுமுறை நாட்களில் ஊழியர்களை வரவழைத்து வேலை வாங்குகிறார்.
வார நாட்களில் இரவு 11:00 மணி வரை வேலை வாங்குகிறார்' என குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், பெண்களிடம் அவதுாறாக பேசி வரும் பொது மேலாளர் ராதாகிருஷ்ணனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தலைமை அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று, பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.