/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திறந்தவெளி கிடங்கில் பயங்கர தீ நோயாளிகள் இடமாற்றம்
/
திறந்தவெளி கிடங்கில் பயங்கர தீ நோயாளிகள் இடமாற்றம்
திறந்தவெளி கிடங்கில் பயங்கர தீ நோயாளிகள் இடமாற்றம்
திறந்தவெளி கிடங்கில் பயங்கர தீ நோயாளிகள் இடமாற்றம்
ADDED : பிப் 21, 2024 01:47 AM

மாதவரம்:மாதவரம் அடுத்த மாத்துார் நகர்ப்புற மருத்துவமனை அருகே, தனியாரின் கனரக உதிரிபாகங்கள் இருப்பு வைக்கும் திறந்தவெளி கிடங்கு உள்ளது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பழைய லாரி டயர்கள் உட்பட, லாரியின் பல்வேறு உதிரிபாகங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நேற்று மதியம் 2:00 மணியளவில், 'காஸ்' வெல்டிங் வாயிலாக, லாரி உதிரிபாகங்கள் வெட்டி எடுக்கும் பணியின்போது, தீப்பொறி பறந்து அங்கிருந்த கழிவு ஆயிலில் விழுந்து தீப்பிடித்துள்ளது.
காற்றின் வேகம் காரணமாக, சிறிது நேரத்தில் அங்கிருந்த பழைய லாரி டயர்களில் தீ பரவி கொழுந்து விட்டெரிந்தது. இதனால், கிடங்கு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் புகை மூட்டமாக மாறியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடனடியாக சுற்றுவட்டாரங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
தீ விபத்தால் ஏற்பட்ட அடர்த்தியான கரும்புகையால், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி அவதிப்பட்டனர்.
அவர்கள், ஆம்புலன்ஸ் வாயிலாக, புழலில் உள்ள நகர்ப்புற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மாதவரம், மணலி, செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், தீ அணைக்கப்பட்டது. மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

