/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லிட்டில் ப்ளவர் பள்ளியில் கல்வி கருத்தரங்கம்
/
லிட்டில் ப்ளவர் பள்ளியில் கல்வி கருத்தரங்கம்
ADDED : செப் 14, 2025 03:21 AM

குன்றத்துார்:குன்றத்துாரில் உள்ள லிட்டில் ப்ளவர் பள்ளியில் நேற்று, கல்வி கருத்தரங்கம் நடந்தது.
லிட்டில் ப்ளவர் கல்விக் குழுமம் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட சுயநிதி பள்ளிகளின் சங்கமம் சார்பில், குன்றத்துாரில் உள்ள லிட்டில் ப்ளவர் பள்ளி வளாகத்தில், 'கல்வி கருத்தரங்கம்' நேற்று நடந்தது. 300க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
லிட்டில் ப்ளவர் கல்வி குழுமத்தின் நிறுவனர் ஜான் சேவியர் தங்கராஜ் தலைமை வகித்தார். கருத்தரங்கில், 'பள்ளிக்கல்வியை மறுவரையறை செய்தல்' என்ற தலைப்பில், குழு விவாதம் நடந்தது. இதில் 'பின்லாந்து - 2030' அமைப்பின் இயக்குனர் மைக் கராட்ஹெய்ட் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
நவீன கல்வியியல் கருத்துகளை மையமாக கொண்டு, 'சிந்தனை பரிமாற்றம்' நிகழ்ச்சி நடந்தது. இதை, லிட்டில் ப்ளவர் ஜுபிலி இன்டர் நேஷனல் அகாடமி முதல்வர் ரூபியா எட்வின் தொகுத்து வழங்கினார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பையை மீண்டும் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு, மஞ்சப்பை வழங்கப்பட்டது.