/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 பள்ளிக்கு குடிநீர், கூடுதல் கட்டடம் வசதி ரூ.4.20 கோடியில் 4 பள்ளியில் குடிநீர், கூடுதல் கட்டடம் வசதி

ADDED : அக் 23, 2024 12:51 AM
குரோம்பேட்டை, தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில், நான்கு பள்ளிகளில், 4.20 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம், கண்காணிப்பு கேமரா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில், ஈசா பல்லாவரம் தொடக்கப் பள்ளி, ஜமீன் பல்லாவரம் தொடக்கப் பள்ளி, ஜமீன் பல்லாவரம் உயர்நிலைப் பள்ளி, கீழ்க்கட்டளை நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, இப்பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா, கூடுதல் கட்டடம், கழிப்பறை, சுற்றுச்சுவர், பேவர் பிளாக், மேசை, இருக்கை, கதவு, ஜன்னல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக, 4.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இப்பணிக்கு டெண்டர் விட்டு, பணிகளை துவக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.