ADDED : ஜூன் 14, 2025 02:33 AM

அ நிறம் | அளவு
சென்னை:கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இயக்குனராக, ஒப்பந்த அடிப்படையில் டாக்டர் பார்த்தசாரதி பணியாற்றி வந்தார். அவருக்கு மீண்டும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், அரசு டாக்டர்களுக்கான பதவி உயர்வு தடைபடுவதாக கூறி, அரசு டாக்டர்கள் சங்கத்தினர் மருத்துவமனை வளாகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
