/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீட்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் இடித்து அகற்றம்
/
மீட்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் இடித்து அகற்றம்
மீட்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் இடித்து அகற்றம்
மீட்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் இடித்து அகற்றம்
ADDED : செப் 20, 2025 12:56 AM

சென்னை : நீர்வழி பாதை மீட்கப்பட்ட நிலையில், 15 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை மீண்டும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் நேற்று இடித்து அகற்றப்பட்டது.
இனிமேல் ஆக்கிரமிப்பு நடக்காமல் இருக்க, தலைமை செயலர் தலையிட வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேளச்சேரி ரயில்வே சாலையை ஒட்டி உள்ள இடங்கள், சோழிங்கநல்லுார் மற்றும் வேளச்சேரி தாலுகாவுக்கு உட்பட்டவை. இதில், பல்வேறு சர்வே எண்களில், நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு இடங்கள் உள்ளன.
உத்தரவு இந்த இடத்தின் ஒரு பகுதி, ரயில்வே திட்டத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், எந்த இடத்திற்கும் எல்லை நிர்ணயிக் காததால், பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.
நம் நாளிதழ் செய்தி மற்றும் நீதிமன்றம் தலையீடு காரணமாக, பல கோடி ரூபாய் மதிப்புடைய 10 ஏக்கருக்கும் மேற்பட்ட இடம் மீட்கப்பட்டது.
வேலி அமைக்காத நிலையில், காலியாக இருந்த இந்த இடத்தை மீண்டும் ஆக்கிரமித்து, கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, தெற்கு வட்டார துணை கமிஷனர் அதாப் ரசூல், மண்டல அதிகாரி ஆர்டின் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டனர்.
நிரந்தர தீர்வு இதையடுத்து, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் மீட்கப்பட்டது.
இது குறித்து, மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே சாலையை ஒட்டி உள்ள இடங்கள், வேளச்சேரி, சோழிங்கநல்லுார் தாலுகா கட்டுப்பாட்டில் உள்ளன.
புதிதாக ஆக்கிரமிப்பு கள் முளைப்பதை தடுக்க, வருவாய்த் துறை எல்லை நிர்ணயம் செய்து வேலி அமைக்க வேண்டும்.
ஆனால் அத்துறையினர் கண்டுகொள் வ தில்லை. தவிர, ஆக்கிரமிப் பாளர்கள், சர்வே எண்களை மாற்றி விண்ணப்பித்தால், கள ஆய்வு செய்யாமல், இரு தாலுகா அதிகாரிகளும் பட்டா வழங்குகின்றனர்.
இதுவே ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணம்.மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்காமல் இருக்க, தலைமை செயலர் தலையிட்டால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும். அரசு இடங்களும் மீட்கப்படும்; வேளச்சேரி வெள்ள பாதிப்பும் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.