/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தப்ப முயன்ற குற்றவாளிக்கு எலும்பு முறிவு
/
தப்ப முயன்ற குற்றவாளிக்கு எலும்பு முறிவு
ADDED : மே 02, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, புளியந்தோப்பு காவல் நிலைய தனிப்படை போலீசாருக்கு, நேற்று முன்தினம் கிடைத்த தகவலின்படி, பாடி புதுநகரில் உள்ள வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு 234 போதை மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மாத்திரைகளை பதுக்கிய ஐ.சி.எப்., காந்தி நகரைச் சேர்ந்த பரத்ராஜ், 23, என்பவரை, கைது செய்து வீட்டின் முதல் மாடியில் இருந்து அழைத்து வந்தபோது, தப்ப முயன்று பரத்ராஜ் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

