/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி :பிரதான சாலைகளில் வேகத்தடை வருமா?
/
புகார் பெட்டி :பிரதான சாலைகளில் வேகத்தடை வருமா?
ADDED : செப் 26, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரதான சாலைகளில் வேகத்தடை வருமா?
பெருங்குடி மண்டலத்தில், மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.
இதனால், கார், இருசக்கர வாகன ஓட்டிகள், குடியிருப்பு பகுதியில் உள்ள பிரதான சாலைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
அச்சாலைகளில் காலை முதல் இரவு வரை அதிக போக்குவரத்து காணப்படுவதால், ஆங்காங்கே விபத்துகள் நடக்கின்றன.
இதனால் பரங்கிமலை, ஆலந்துார், ஆதம்பாக்கம் பகுதிகளில் வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் குடியிருப்பு பிரதான சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- ஹரிகிருஷ்ணன், பெருங்குடி

