/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி :ஆட்டோக்கள் அடாவடி விம்கோ நகரில் அவதி
/
புகார் பெட்டி :ஆட்டோக்கள் அடாவடி விம்கோ நகரில் அவதி
புகார் பெட்டி :ஆட்டோக்கள் அடாவடி விம்கோ நகரில் அவதி
புகார் பெட்டி :ஆட்டோக்கள் அடாவடி விம்கோ நகரில் அவதி
ADDED : டிச 17, 2024 12:14 AM

ஆட்டோக்கள் அடாவடி விம்கோ நகரில் அவதி
மெட்ரோ ரயில் நிலையம், மின்சார ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ள விம்கோ நகரில், மக்கள் நடமாட்டம் மிகுதியாக உள்ளது. மேலும், விம்கோ நகர் காய்கறி, பழங்கள், மீன் மார்க்கெட்டும் இங்கு செயல்பட்டு வருவதால், பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், பேருந்து நிறுத்தங்களை ஆக்கிரமித்து அதிகளவில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, மாநகர பேருந்துகள் வந்து நிற்க இடமில்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பயணியரை ஏற்றும் ஆர்வத்தில், விடாபிடியாக பேருந்து நிலையத்தை விட்டு சட்டென நகர்வதில்லை. இதனால், பைக், கார் உள்ளிட்ட மற்ற வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.கிறிஸ்டி, விம்கோ நகர், திருவொற்றியூர்.