/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு
/
குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு
குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு
குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு
ADDED : செப் 09, 2025 11:22 PM

சென்னை :சிறுமி பாலியல் வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த இன்ஸ்பெக்டர் தர்மாவை அழைத்து, போலீஸ் கமிஷனர் அருண், நேற்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.
அடையாறு பகுதியில், 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, 20 வயது வாலிபரை, போக்சோ சட்டத்தில், அடையாறு மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2015ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இன்ஸ்பெக்டர் தர்மா தலைமையிலான குழுவினர் விசாரித்து, இறுதி அறிக்கை தயார் செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, வாலிபருக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கடந்த 25ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.
சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த, பெண் இன்ஸ்பெக்டர் தர்மாவை நேற்று, கமிஷனர் அருண் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.
7 பேருக்கு வெகுமதி
புனித தோமையர் மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கஞ்சா வைத்திருந்த, சிறுவன் உட்பட ஏழு பேரை கைது செய்த உதவி ஆய்வாளர் கரிகாலன், காவலர்கள் பாலாஜி, முனியசாமி ஆகியோருக்கு, கமிஷனர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
அதேபோல், திருவொற்றியூரில் குறைதீர் முகாமில் வலிப்பு ஏற்பட்ட, 2 வயது குழந்தையை மீட்டு, விரைந்து மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிதுரைக்கும், கமிஷனர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
***