/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - ஷாலிமர் சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு
/
சென்னை - ஷாலிமர் சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு
சென்னை - ஷாலிமர் சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு
சென்னை - ஷாலிமர் சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு
ADDED : டிச 28, 2025 06:03 AM
சென்னை: பயணியர் தேவை கருதி, சென்னை - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமருக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை, ஜனவரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
ஷாலிமர் - சென்னை சென்ட்ரலுக்கு வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், வரும் ஜனவரி 5, 12, 19, 26ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்
சென்னை சென்ட்ரல் - ஷாலிமருக்கு வாரந்தோறும் புதன் கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், வரும் ஜனவரி 7, 14, 21, 28ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.
மேற்கண்ட சிறப்பு ரயில்களில், முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.