/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாபாரி மீது கொடூர தாக்குதல் அ.தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
/
வியாபாரி மீது கொடூர தாக்குதல் அ.தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
வியாபாரி மீது கொடூர தாக்குதல் அ.தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
வியாபாரி மீது கொடூர தாக்குதல் அ.தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : ஜூலை 26, 2025 12:26 AM
தாம்பரம், முதியவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக அ.தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம், சேலையூர் அடுத்த பதுவஞ்சேரியைச் சேர்ந்தவர் சாத்தையா, 52; 'டான்டீ' எனும் தமிழ்நாடு தேயிலை வளர்ச்சி கழகத்தின், தாம்பரம் விற்பனை முகவராக உள்ளார்.
இவர், 2017ம் ஆண்டு, அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தலைமை செயலக காலனியில், உரிய அனுமதி பெற்று டான்டீ விற்பனை கடை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு, விற்பனையை விரிவுப்படுத்த, கடையை ஒட்டி தகர ஷெட் அமைக்க முயன்றுள்ளார். அப்போது, தாம்பரம் மாநகராட்சி, 69வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் வாட்டர் ராஜ் என்பவர், அங்கு வந்து பிரச்னை செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சேலையூர் காவல் நிலையத்தில் சாத்தையா புகார் அளித்தார்.
இதையடுத்து, தகர ெஷட் அமைக்கும் பணியில் சாத்தையா ஈடுபட்டபோது, வாட்டர் ராஜ் ஆட்களை அழைத்து வந்து, மீண்டும் மிரட்டியுள்ளார்; சாத்தையா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 1ம் தேதி, வாட்டர் ராஜ் சாத்தையாவை தகாத வார்த்தைகளால் பேசி, முகத்திலும், கன்னத்திலும் தாக்கியதாகவும், கருங்கல்லை எடுத்து தலையில் போட முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சாத்தையா கொடுத்த புகாரின்படி, சேலையூர் போலீசார் வாட்டர் ராஜ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

