/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.22 லட்சத்தில் போரூரில் காரிய மேடை
/
ரூ.22 லட்சத்தில் போரூரில் காரிய மேடை
ADDED : ஜன 24, 2025 12:10 AM

போரூர்,
போரூரில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் காரிய மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை, வளசரவாக்கம் மண்டலம், போரூர் 153வது வார்டில் காரிய மேடை இல்லாததால், அப்பகுதி மக்கள் போரூர், 150வது வார்டில் உள்ள காரிய மேடையை பயன்படுத்தி வந்தனர்.
எனவே, 153வது வார்டில் காரிய மேடை அமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 153வது வார்டு கவுன்சிலர் நிதியில், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், காரிய மேடை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதன்படி, போரூர் ராமசாமி நகர், முதல் தெருவில் காரிய மேடை அமைக்கும் பணி துவக்கப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில வாரங்களில் காரிய மேடை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

