ADDED : நவ 24, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ருவல்லிக்கேணி, தெற்கு குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் வனமாதி, 8. நேற்று தேரடி தெருவில் உள்ள தாத்தா நரசிம்மன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பார்த்தசாரதி கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டிருந்த 7 அடி குழியில், 6 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. அதன் அருகே, நேற்று மாலை வனமாதி, இறகு பந்து விளையாடினார்.
அப்போது அங்கிருந்த குழியில் தவறி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

