ADDED : டிச 19, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அய்யப்பன்தாங்கல்: அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம் அருகே, 'சிட்டி யூனியன்' வங்கி செயல்படுகிறது.
வங்கி அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த இ- - மெயிலில், 'வங்கியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது; சிறிது நேரத்தில் வெடிக்கும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால் பதற்றமடைந்த ஊழியர்கள், போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேர சோதனைக்கு பின், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

