/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென் மண்டல கூடைப்பந்து பாரதியார் பல்கலை வெற்றி
/
தென் மண்டல கூடைப்பந்து பாரதியார் பல்கலை வெற்றி
ADDED : டிச 27, 2025 05:27 AM

சென்னை: தென் மண்டல பல்கலைகளுக்கு இடையிலான கூடைப்பந்து தொடரின் நேற்றைய போட்டியில், தமிழகத்தின் பாரதியார் பல்கலை அணி, அடுத்தடுத்து இரு போட்டிகளில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், 2025 - -26ம் ஆண்டிற்கான தென் மண்டல பல்கலைகளுக்கு இடையிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த 24ம் தேதி துவங்கின.
இப்போட்டியில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன.இதில், நேற்று காலை 13 போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், கோவை பாரதியார் பல்கலை அணி, இரு போட்டிகளில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
முதல் போட்டியில், ஆந்திராவின் ஆச்சார்யா நாகர்ஜுனா பல்கலை அணியை, 65 - -33 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வீழ்த்தியது.
அடுத்த போட்டியில், சென்னை ஜேப்பியார் பல்கலை அணியை, 72 - -49 என்ற புள்ளி கணக்கில் சிரமமின்றி வென்று, அடுத்த சுற்றுக்குள் பாரதியார் பல்கலை அணி நுழைந்தது.
இதேபோல், எஸ்.ஆர்.எம்., - பி.இ.எஸ்., கர்நாடகா ஆகிய பல்கலை அணிகளும், அடுத்த சுற்றுக்கு முன்னேறின. போட்டிகள், 28ம் தேதி நிறைவடைகின்றன.

