/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொலை முயற்சி பகுஜன் சமாஜ் நிர்வாகி புகார்
/
கொலை முயற்சி பகுஜன் சமாஜ் நிர்வாகி புகார்
ADDED : டிச 10, 2024 12:23 AM
நொளம்பூர், நொளம்பூர், அணுகு சாலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்பாஸ், 46. இவர், பகுஜன் சமாஜ் கட்சியில், திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவராக உள்ளார். மேலும், இவர் வசிக்கும் 'பிபிசிஎல்' குடியிருப்பில் தலைவராகவும் உள்ளார். இவர் நொளம்பூர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், குடியிருப்பின் 'வாட்ஸாப்' குழுவில், கடந்த 6ம் தேதி, அதே குடியிருப்பைச் சேர்ந்த ஜெய்சிங் என்பவரின் துாண்டுதலின் பெயரில், குமார் என்பவர் என்னை பற்றி அவதுாறாக பதிவிட்டார்.
நேற்று முன்தினம், இதற்கு விளக்கம் கேட்டபோது, குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு என்னை தாக்கியதோடு, அவர் வைத்திருந்த கண்ணாடியை எடுத்து, என்னை குத்தி கொலை செய்ய முயன்றார். அவர் மீதும், அவர் பின் இருக்கும் ஜெய்சிங் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

