/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1 அனுப்ப சொல்லி ரூ.46,000 பறிப்பு ஆட்டோ ஓட்டுனரிடம் நுாதன 'ஆட்டை'
/
ரூ.1 அனுப்ப சொல்லி ரூ.46,000 பறிப்பு ஆட்டோ ஓட்டுனரிடம் நுாதன 'ஆட்டை'
ரூ.1 அனுப்ப சொல்லி ரூ.46,000 பறிப்பு ஆட்டோ ஓட்டுனரிடம் நுாதன 'ஆட்டை'
ரூ.1 அனுப்ப சொல்லி ரூ.46,000 பறிப்பு ஆட்டோ ஓட்டுனரிடம் நுாதன 'ஆட்டை'
ADDED : ஏப் 25, 2025 11:51 PM
அரும்பாக்கம், முகப்பேர், மேற்கு ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ், 46. இவர், நேற்று முன்தினம் இரவு ஆவடி, ஜெய் நகர் அருகே உள்ள 'டாஸ்மாக்' கடை வாயிலில் சவாரிக்காக நின்றிருந்தார்.
அப்போது, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அரும்பாக்கம் செல்ல வேண்டும் எனக் கூறி ஆட்டோவில் பயணித்தார்.
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி நெடுஞ்சாலையின் இறக்கினார். பின், ஆட்டோவில் வந்த பயணி, தன் போன் 'சுவிட்ச் ஆப்' ஆகிவிட்டது. எனவே, நண்பருக்கு போன் 'ஜிபே' எனும் பணம் பரிவர்த்தனை செய்யும் மொபைல் போன் செயலி வாயிலாக சவாரிக்கான பணத்தை செலுத்துவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ், தன் மொபைல் போனை அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர், தன் நண்பர்கள் இருவருக்கு போன் செய்ததாகவும், அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், இரண்டு மொபைல் போன் எண்களை கொடுத்து, 'நீங்கள் இந்த எண்களுக்கு, தலா ஒரு ரூபாய் 'ஜிபே' செய்யுங்கள்; அவர்கள் உடனே பணத்தை அனுப்புவர்' எனக் கூறியுள்ளார்.
பிரகாஷும் பயணி கூறியபடி, இரு எண்களுக்கும் தலா 1 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், சவாரிக்கான பணம் வரவில்லை.
இந்த நிலையில், 'போன் 'ஆன்' ஆகிவிட்டது; நானே பணம் அனுப்புகிறேன்' எனக் கூறிய அந்த பயணி, சவாரிக்கான 600 ரூபாயை 'ஜிபே' வாயிலாக அனுப்பி, அங்கிருந்து சென்றுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின், ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 46,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த பிரகாஷ், இதுகுறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் மொபைல் போன் செயலி ஒன்றின் 'டாக் பேக்' வாயிலாக, ஆட்டோ ஓட்டுனரின் வங்கி கணக்கில் இருந்து, பணம் திருடப்பட்டுள்ளது தெரிந்தது. நுாதனமாக ஆட்டோ ஓட்டுனரிடம் பணம் பறித்த பயணியை குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

