ADDED : பிப் 21, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்:கொளத்துார், திருமலை நகர் 200 அடி சாலையில், எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை 2:20 மணியளவில் ஏ.டி.எம்., மையத்தில் நுழைந்த மர்ம நபர்கள் இருவர், ஏ.டி.எம்.,மை உடைத்து திறக்க முயற்சித்துள்ளனர்.
முடியாத நிலையில் கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து, மும்பை தலைமையகத்தில் இருந்து தொலைபேசி மூலம் வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜமங்கலம் போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

