/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமல்லை 'சிட்கோ' சிற்ப பூங்கா திட்டம் இழுபறி அலட்சிய அதிகாரிகளால் கலைஞர்கள் அதிருப்தி
/
மாமல்லை 'சிட்கோ' சிற்ப பூங்கா திட்டம் இழுபறி அலட்சிய அதிகாரிகளால் கலைஞர்கள் அதிருப்தி
மாமல்லை 'சிட்கோ' சிற்ப பூங்கா திட்டம் இழுபறி அலட்சிய அதிகாரிகளால் கலைஞர்கள் அதிருப்தி
மாமல்லை 'சிட்கோ' சிற்ப பூங்கா திட்டம் இழுபறி அலட்சிய அதிகாரிகளால் கலைஞர்கள் அதிருப்தி
ADDED : டிச 11, 2024 12:17 AM
மாமல்லபுரம்,மாமல்லபுரம் சிற்பக் கூடங்களுக்காக அறிவிக்கப்பட்ட,'சிட்கோ' சிற்ப பூங்கா திட்டம்,மூன்றாண்டுகள் கடந்தும் கிடப்பில் உள்ளது. இதனால், சிற்பக் கலைஞர்கள்கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், சிற்பக்கூடங்கள் ஏராளமாக செயல்படுகின்றன. 3,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான சிற்பக்கூடங்கள், பிரதான சாலைகளை ஒட்டியே அமைந்துள்ளன. இயந்திரங்களால் கல்லை அறுப்பது, செதுக்குவது போன்ற பணிகளை மேற்கொள்வதால் கல் துகள்கள் பரவி, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
சாலை பகுதிகளில் கற்கள் குவிக்கப்பட்டு, இடையூறு ஏற்படுகிறது.
இதையடுத்து, சிற்பக்கூடங்களை ஓரிடத்தில் ஒருங்கிணைக்க, தமிழக அரசு முடிவெடுத்தது.
தமிழக அரசின், 'சிட்கோ' நிறுவனம் சார்பில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில், 23 கோடி ரூபாய் மதிப்பில், 'சிட்கோ' சிற்ப பூங்கா அமைப்பதாக, கடந்த 2021ல் சட்டசபையில் அறிவித்தது.
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதி, புதுச்சேரி சாலையை ஒட்டி, 21 ஏக்கர் இடம் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை திட்டம் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது, சிற்பக் கலைஞர்களின் ஓட்டுகளை கவர கருதி, திட்டப் பணிகளை துவக்கும் போர்வையில், அங்கு வளர்ந்திருந்த முட்புதரை மட்டும் அகற்றினர்; வேறு எந்த பணியையும் துவக்கவில்லை.
இந்நிலையில், நிறுவன நிர்வாக குளறுபடிகளால் இத்திட்டம் காலதாமதமாவதாகவும், இறுதியில் கைவிடப்படலாம் என்றும்கூறப்படுகிறது.
இப்பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடம், தி.மு.க., தலைமையகம் அமைய உள்ளதாக கூறப்படும் இடத்தை ஒட்டியே உள்ளது. அதனால், தொழிற்பேட்டையால் இடையூறு ஏற்படலாம் எனக் கருதி, இத்திட்டம் தவிர்க்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.
இதுகுறித்து, திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சிற்பக்கூட உரிமையாளர்கள்கூறியதாவது:
அரசு சார்பில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பரப்பில் இலவச இடம் அளிக்கப்படும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், அதிகாரிகள், இடத்தை வாடகைக்கு அளிப்பதாக தெரிவித்தனர். இதுபற்றி ஓராண்டிற்கு முன் எங்களிடம் ஆலோசித்த அதிகாரிகள், அதன் பின் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

