/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி
/
அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி
ADDED : பிப் 09, 2024 12:59 AM

சென்னை, சூளை அங்காளபரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கட்டடம் அங்காளம்மன் தெருவில் உள்ளது. அக்கட்டடத்தில் 614 சதுர அடி இடத்தில் ஸ்ரீதரன் நாயர் என்பவர், வாடகைக்கு இருந்தார்.
தொடர்ந்து வாடகை செலுத்தாமல் இருந்ததால், நீதிமன்ற உத்தரவின்படி, கோவில் செயல் அலுவலர் சண்முகம் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது
இதற்கு அப்பகுதியினரும், பாரத் ஹிந்து முன்னணி அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்னையை முன் வைத்து, ஓட்டேரியில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வீட்டை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அறிவுறுத்தினர்.
இதையடுத்து ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம், போராட்டக்காரர்கள் பேச்சு நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வரும் திங்களன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டமும், கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டமும் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

