/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.எல்., முதலியார் தடகளம்: 11 ஆண்டு சாதனை முறியடிப்பு
/
ஏ.எல்., முதலியார் தடகளம்: 11 ஆண்டு சாதனை முறியடிப்பு
ஏ.எல்., முதலியார் தடகளம்: 11 ஆண்டு சாதனை முறியடிப்பு
ஏ.எல்., முதலியார் தடகளம்: 11 ஆண்டு சாதனை முறியடிப்பு
ADDED : டிச 24, 2025 05:27 AM

சென்னை: சென்னை பல்கலையின் ஏ.எல்., முதலியார் தடகளப் போட்டியில், 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், 11 ஆண்டுகள் தொடர்ந்த சாதனையை, எம்.ஓ.பி., மாணவி முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
சென்னை பல்கலை சார்பில், ஏ.எல்., முதலியார் நினைவு கோப்பைக்கான தடகளப் போட்டிகள், பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வருகின்றன.
இரண்டாவது நாளான நேற்று, பெண்கள் பிரிவில்,1,000 மீ., ஓட்டத்தில், எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லுாரி மாணவி லதா, பந்தைய துாரத்தை 36:40 நிமிடத்தில் கடந்து, 2024 - 25ம் ஆண்டில் படைத்த 37:42 என்ற தன் சாதனையை, தானே முறியடித்து அசத்தினார்.
அதேபோல், 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், எம்.ஓ.பி., மாணவி யாமினி, பந்தைய துாரத்தை, 13:60 வினாடியில் கடந்து புதிய சாதனையை படைத்தார்.
இதற்கு முன், 2013 - 14ல் அதே கல்லுாரி முன்னாள் மாணவி காயத்ரியின் 13:70 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 11 ஆண்டுகளுக்கு பின், புதிய சாதனை படைக்கப்பட்டது. லயோலாவின் ரேஷ்மா வெள்ளி வென்றார்.
வட்டு எறிதலில், எம்.ஓ.பி., மாணவி ஐஷாலு ரேகானா 41.78 மீ., எறிந்து தங்கமும், அதே கல்லுாரி மாணவி மெர்லின் ஹன்னா வெள்ளியும், இந்து கல்லுாரி மாணவி சுப்ரஜா கூசத்ரியா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில், டி.ஜி.வைஷ்ணவ கல்லுாரி மாணவர் முகேஷ், 30:23 நிமிடத்தில் கடந்து தங்கம் வென்றார். ஏ.எம்., ஜெயின் மாணவர் தமிழ்செல்வன், லயோலாவின் விஷால் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
குண்டு எறிதலில் டி.ஜி. வைஷ்ணவ மாணவர் ஆஷூ தலால் 17.42மீ., எறிந்து முதலிடத்தையும், அதே கல்லுாரி மாணவர் பாலாஜி, லயோலாவின் ஸ்ரீகுமார் வெள்ளி மற்றும் வெண்கலம் கைப்பற்றினர். 100 மீ., ஓட்டத்தில் லயோலாவின் கில்சன் தர்மராஜ், டி.ஜி.வைஷ்ணவ முகமது ஹானிப் மற்றும் அருண் குமார் முறையே முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.

