/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏர்போர்ட் - டி2' முனையம் அருகே மது அருந்தி மர்ம நபர்கள் அட்டகாசம்
/
'ஏர்போர்ட் - டி2' முனையம் அருகே மது அருந்தி மர்ம நபர்கள் அட்டகாசம்
'ஏர்போர்ட் - டி2' முனையம் அருகே மது அருந்தி மர்ம நபர்கள் அட்டகாசம்
'ஏர்போர்ட் - டி2' முனையம் அருகே மது அருந்தி மர்ம நபர்கள் அட்டகாசம்
ADDED : டிச 15, 2025 05:01 AM

சென்னை: சென்னை விமான நிலைய சர்வதேச வருகை முனையம் எதிரே உள்ள இடத்தில், மர்ம நபர்கள் இரவில் மது அருந்தி அட்டகாசம் செய்வதும், சிறுநீர் கழிப்பதும் பயணியரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையம், மூன்று முனையங்களுடன் செயல்படுகிறது. இங்கு ஒரு நாளைக்கு 60,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர்.
இதில், 'டி2' சர்வதேச வருகை முனையத்தின் அருகே, விமான நிலைய மெட்ரோவுக்கு செல்லும் வழியில் ஏ.ஏ.ஐ., ஊழியர் நல சிற்றுண்டி உணவகம் இயங்கி வந்தது.
இதன் ஒப்பந்தம் முடிவடைந்ததால், நான்கு மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. பின் அந்த இடத்தை, அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், அந்த உணவகம் இருந்த இடத்தில் மர்ம நபர்கள் சிறுநீர் கழிப்பது, இரவு நேரத்தில் மது அருந்துவது போன்ற செயல்களில் சமீபநாட்களாக ஈடுபடுகின்றனர்.
அவ்வழியே செல்லும் பயணியர் சிலர் தட்டிக்கேட்டால், அவர்களை ஒருமையில் பேசி மிரட்டுகின்றனர். விமான நிலைய போலீசாரும் இதை கண்டுக்கொள்ளாததால், பயணியர் அச்சமடைகின்றனர்.
இது குறித்து பயணியர் சிலர் கூறியதாவது:
சர்வதேச வருகை முனையத்தில் இருந்து, விமான நிலைய மெட்ரோ நிலையத்திற்கு செல்லும் வழியில், துர்நாற்றம் வீசக்கூடிய இடம் உள்ளது. அங்கு பலர் சிகரெட் புகைப்பது, மது குடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சர்வதேச விமான நிலையம், இப்படித்தான் இருக்குமா என யோசிக்க வைக்கிறது. இது, பயணியர் பாதுகாப்பு மட்டுமின்றி அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. விமான நிலையத்திற்குள், வெளியில் இருந்து ஆட்கள் வருகின்றனர். போலீசாரும் இதை கண்டுகொள்வதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

