/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் அலட்சியம் அடையாறு கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ADDED : ஏப் 10, 2025 12:35 AM
அடையாறு,அடையாறு மண்டல குழு கூட்டம், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், ஆனந்தம், பாஸ்கரன், மோகன்குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
வேளச்சேரி இ.பி., காலனி, நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில், வடிகால்வாய் கட்ட வேண்டும்.
வேளச்சேரியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காததால், மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
கிண்டி, அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர் பகுதிகளில், கழிவுநீர் சாலையில் தேங்குவது பெரும் பிரச்சனையாக உள்ளது.
சிட்கோ வளாகத்தில், சாலை சீரமைப்பு, தெரு விளக்கு பராமரிப்பை சிட்கோ நிர்வாகம் செய்வதில்லை. அதற்கான கட்டமைப்பு வசதிகளும் அவர்களிடம் இல்லை. இதனால், சிட்கோ வளாகத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.
அம்பேத்கர் நகரில் உள்ள, 180க்கும் மேற்பட்ட தெருக்களில், குடிநீர் சீராக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
தரமணியில் குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு, பல மாதங்களுக்கு தீர்வு காணப்படாததால், மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழலில் உள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் அவர்களை சமாதானப்படுத்தி, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என கூறி வருகிறேன். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.
இதற்கு, அந்தந்த துறை அதிகாரிகள் பதில் கூறினர். சில கேள்விகளுக்கான பதிலால், கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
'கொசு தொல்லை, முறையாக கொசு ஒழிப்பு மருந்து பயன்படுத்தப்படுகிறதா, மருந்தில் வீரியம் உள்ளதா' என, மொத்த கவுன்சிலர்களும் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரி இல்லாததால், கவுன்சிலர்கள் கடும் கோபம் அடைந்தனர்.
தொடர்ந்து, பூங்கா பராமரிப்பு, வடிகால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட, 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.