ADDED : அக் 29, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,புரசைவாக்கம், குழந்தை தெருவை சேர்ந்தவர் ராம் துலா யாதவ், 40. இவர், புரசைவாக்கம், சுந்தரம் தெருவில், 7 ஆண்டுகளாக ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்றுமுன்தினம் மாலை, 4:00 மணியளவில் கடையை மூடிவிட்டுச் சென்றார்.
நேற்று காலை, 8:10 மணியளவில் பூட்டியிருந்த கடையிலிருந்து, புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர், கடை உரிமையாளருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
வேப்பேரி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் டப்பாக்கள், கடையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உபயோகமில்லாத இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து, வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

