/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ்காரர் ஓட்டிய கார் மோதி விபத்து
/
போலீஸ்காரர் ஓட்டிய கார் மோதி விபத்து
ADDED : பிப் 09, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார், கொளத்துார், மக்காராம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த், 34; திரு.வி.க.நகர் காவல் நிலைய போலீஸ்காரர். தற்போது விடுமுறையில் உள்ள இவர், நேற்று முன்தினம் இரவு பேப்பர்மில்ஸ் சாலை, ராம் நகர் முதலாவது பிரதான சாலையில் காரில் சென்றார்.
அப்போது, ஒரு பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பைக்கை ஓட்டி வந்த, மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன், 37, என்பவருக்கு, தோள்பட்டை, இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னால் அமர்ந்திருந்த ஹரிபிரசாத், 22, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

