/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கற்றலை வளர்க்க 8 ஆய்வகம் ஆர்க்கிட்ஸ் பள்ளியில் புதுமை
/
கற்றலை வளர்க்க 8 ஆய்வகம் ஆர்க்கிட்ஸ் பள்ளியில் புதுமை
கற்றலை வளர்க்க 8 ஆய்வகம் ஆர்க்கிட்ஸ் பள்ளியில் புதுமை
கற்றலை வளர்க்க 8 ஆய்வகம் ஆர்க்கிட்ஸ் பள்ளியில் புதுமை
ADDED : பிப் 09, 2024 12:58 AM

பெரும்பாக்கம், பெரும்பாக்கத்தில் இயங்கிவரும், 'ஆர்க்கிட்ஸ்' பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் நோக்கில், எட்டு வித ஆய்வகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னை, பெங்களூரு, மும்பை, கோல்கட்டா, நாக்பூர் உள்ளிட்ட, 25 முக்கிய நகரங்களில் 90 பள்ளிகளை நிறுவி, நாட்டின் முன்னணி தனியார் பள்ளியாக, 'ஆர்கிட்ஸ் தி இன்டர்நேஷனல்' கல்விக் குழுமம் திகழ்ந்து வருகிறது.
இக்குழுமத்தின் சார்பில் சென்னை, மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் இயங்கி வரும் பள்ளிக் கிளையில், மாணவர்களின் கற்றல் திறனையும், பன்முகத் திறமைகளையும் எளிதாக மேம்படுத்தும் நோக்கில் 'இமேஜின் கப்' எனும் பெயரில், எட்டு ஆய்வகங்கள், பள்ளி கட்டடத்தில் நேற்று துவக்கப்பட்டன.
அதன்படி வானிலை, இசை, நடனம், நாடகம், பொறியியல், நெசவு, தன்னாற்றல் மற்றும் ஓவியம் வரைதல் ஆகிய எட்டுவித திறமைகளை மாணவர்களிடம் வளர்க்கும் விதமாக, பிரத்யேக ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டன.
துவக்க விழாவில், சினிமா நடன இயக்குனர் ஸ்ரீதர், ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா, சென்னை ஐ.சி.சி.ஆர்., முன்னாள் இயக்குனர் முகமது இப்ராஹிம், 'யு-டியூப்' பதிவர் இர்பான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பள்ளி முதல்வர் லாவண்யா கூறியதாவது:
பாடப் புத்தகங்களைத் தவிர்த்து, மாணவர்களின் தனித் திறமையை வளர்த்தெடுக்கும் வகையில், இந்த ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இசை, நடனம், ஓவியம், சினிமா என, மாணவர்களின் விருப்பம் கண்டறியப்பட்டு, அத்துறையில் அவர்களின் திறமையை வளர்க்கும் விதமாக இந்த ஆய்வகங்கள் செயல்படும்.
இதனால், தாங்கள் விரும்பும் துறையில், இவர்கள் சாதனையாளர்களாக மாறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடன இயக்குனர் ஸ்ரீதர் கூறுகையில்,''இந்த ஆய்வகங்கள் மாணவர்களின் மனதை இலகுவாக்கி, கற்றல் திறனை வளர்த்தெடுக்கும். ஆசிரியர்களுக்கும் இந்த ஆய்வகங்கள் பயனளிக்கும்,'' என்றார்.

