/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கிடுகிடு'வென உயரும் பூண்டு விலை வரத்து குறைவால் கிலோ ரூ.500
/
'கிடுகிடு'வென உயரும் பூண்டு விலை வரத்து குறைவால் கிலோ ரூ.500
'கிடுகிடு'வென உயரும் பூண்டு விலை வரத்து குறைவால் கிலோ ரூ.500
'கிடுகிடு'வென உயரும் பூண்டு விலை வரத்து குறைவால் கிலோ ரூ.500
ADDED : பிப் 05, 2024 01:39 AM

கோயம்பேடு:கோயம்பேடு வணிக வளாகத்திற்கு ஹிமாச்சல் பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூண்டு வரத்து உள்ளது. அதேபோல, தமிழகத்தின் திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்களில் இருந்து மலைப் பூண்டு வரத்தும் உள்ளது.
கடந்தாண்டு மழையால் பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டது. புதிதாக சாகுபடி செய்யப்பட்ட பூண்டு அறுவடை தாமதமாகி வருகிறது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு தினமும் 200 டன் பூண்டு தேவையுள்ள நிலையில், 60 டன் மட்டுமே நேற்று வந்துள்ளது.
இதனால், பூண்டு விலை அதிகரித்துள்ளது. பூண்டு கொள்முதல் செய்யும் இடத்தில் கிலோ 350 -- 400 ரூாய்க்கு விற்பனையாகிறது. அத்துடன் கிலோவிற்கு 10 -- 15 ரூபாய் போக்குவரத்து செலவும் ஆகிறது.
அதன்படி, கோயம்பேடில் முதல் ரக பூண்டு கிலோ 500 ரூபாய்க்கும், அடுத்தடுத்த ரகங்கள் 450 மற்றும் 350 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. இதனால், பல மளிகை கடைகளில் பூண்டு கிடைக்காத நிலை உள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'வெங்காயம் விலை ஏற்றத்தில் அரசு செயல்பட்டது போல், பூண்டையும் மொத்தமாக அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்' என்றனர்.

