/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீபாவளி பண்டிகைக்கு முன் 200 புது பஸ்கள்: எம்.டி.சி., திட்டம்
/
தீபாவளி பண்டிகைக்கு முன் 200 புது பஸ்கள்: எம்.டி.சி., திட்டம்
தீபாவளி பண்டிகைக்கு முன் 200 புது பஸ்கள்: எம்.டி.சி., திட்டம்
தீபாவளி பண்டிகைக்கு முன் 200 புது பஸ்கள்: எம்.டி.சி., திட்டம்
ADDED : செப் 23, 2025 12:59 AM
சென்னை:தீபாவளி பண்டிகைக்கு முன், 200 புதிய பேருந்து களை இணைக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்தில், கடந்த ஓராண்டாக புதிய பேருந்து களின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், பழைய பேருந்துகள் நீக்கப்பட்டு, தீபாவளி பண்டிகைக்கு முன் புதிய பேருந்துகள் இணைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
மாநகர போக்குவரத்து கழகத்தில், கடந்த ஓராண்டாக புதிய பேருந்துகள் இணைக்கப்பட்டு வருவதால், 500க்கும் மேற்பட்ட பழைய பேருந்துகளை நீக்கி உள்ளோம்.
அதுபோல், புதிய தாழ்தள பேருந்துகள், மின்சார பேருந்துகள் வருகையும் அதிகரித்துள்ளன. இதனால், மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை, 3,400 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை நெருங்க உள்ளதால், தி.நகர், புரசைவாக்கம், பிராட்வேக்கு அதிகளவில் பொதுமக்கள் செல்வார்கள். கிளாம்பாக்கம், கோயம்பேடுக்கு அதிகளவில் இணைப்பு பேருந்துகளும் தேவைப் படுகின்றன.
எனவே, பயணியர் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, தீபாவளிக்குள் 200 புதிய மாநகர பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள், இறுதிகட்டத்தில் உள்ளன.
இந்த பேருந்துகள் நெரிசல் மிக்க வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.