/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.45 லட்சம் 'ஹவாலா' 176 கிராம் தங்கம் பறிமுதல்
/
ரூ.45 லட்சம் 'ஹவாலா' 176 கிராம் தங்கம் பறிமுதல்
ADDED : மார் 10, 2024 12:24 AM
சென்னை, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 45.40 லட்சம் ரூபாய், 176 கிராம் தங்கம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் ரோகித்குமார், ஏ.எஸ்.ஐ.,க்கள் ஜம்புலிங்கம், சுதீன் தாமஸ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து வந்த விரைவு ரயிலில் இருந்து இறங்கிய பயணியரின் உடைமைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, வேலுார் மாவட்டம், காட்பாடி ரோடு, குடியாத்தம் பகுதியை சேர்ந்த, தணிகைவேல் 54 என்பவர், இரண்டு பைகளில் கட்டுக்கட்டாக 45.40 லட்சம் ரூபாய் இருந்தன. அத்துடன், 9.83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 176 கிராம் தங்கமும் இருந்தது. ஆனால், இதற்கு எந்தவித ஆவணங்களும் இல்லை.
இதையடுத்து, அவரை ஆர்.பி.எப்., அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தபோது, அவர், காட்பாடியில் இருந்து விரைவு ரயிலில் பயணம் செய்ததும், ஹவாலா பணத்தை எடுத்து வந்ததும் தெரிந்தது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, பணம், தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

