/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிறிஸ்துமஸ் விடுமுறை வண்டலுார் பூங்காவை 13,000 பேர் ரசித்தனர் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையால் சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்

UPDATED : டிச 26, 2025 05:29 AM
ADDED : டிச 26, 2025 05:26 AM

தாம்பரம்: கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, வண்டலுார் உயிரியல் பூங்காவை, 13,000 பேர் கண்டு ரசித்தனர். பேட்டரி மற்றும் லயன் சபாரி வாகனங்கள் கிடைக்காமல் பார்வையாளர்கள் பரிதவித்தனர்.
வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, பல்வேறு இடங்களில் இருந்து பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். வார நாட்களில், 5,000 முதல் 7,000 வரையிலும், விடுமுறை நாட்களில், 10,000 முதல் 15,0 00 வரையிலும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான நேற்று, வழக்கத்தை காட்டிலும், காலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 11:00 மணிக்கே, பூங்காவினுள் பார்வையாளர்கள் நிர ம்பியிருந்தனர்.
நேற்று மட்டும், வழக்கத்தை காட்டிலும், 13,000 பேர் பூங்காவிற்கு வந்தனர். குழந்தைகள், முதியவர்களுடன் வந்தவர்கள், லயன் சபாரி மற்றும் பேட்டரி கார்களில் சென்று சுற்றிப்பார்க்க ஆர்வம் காட்டினர். அதற்கான டிக்கெட் வாங்கியும், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இதனால், அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
குடும்பத்தினருடன் வந்தவர்கள், குரங்கு, சிங்கம், புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகளை மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்ததோடு, நாள் முழுதும் பொழுதை கழித்தனர்.