/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்களை ஆதரித்து 11 தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
/
துாய்மை பணியாளர்களை ஆதரித்து 11 தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
துாய்மை பணியாளர்களை ஆதரித்து 11 தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
துாய்மை பணியாளர்களை ஆதரித்து 11 தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2025 05:14 AM

சென்னை: தனியார் மயமாக்கப்பட்ட துாய் மை பணியை ரத்து செய்ய வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் உட்பட 11 தொழிற்சங்கங்கள், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின.
ராயபுரம், திரு.வி.நகர் மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் துாய்மை பணியை தனியார் நிறுவனத்திடம், சென்னை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பத்துாரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கம் அலுவலகத்தில், துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஆறு பெண்கள், உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவாக ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., உட்பட 11 தொழிற்சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 200 பேர், பாரிமுனை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஏ.ஐ.டி.யு.சி.,யின் செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''மாநகராட்சியின் கீழ் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நான்கு மாதங்களாக, துாய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
''தமிழக அரசு, இந்த பிரச்னையை தீர்க்காமல் வேடிக்கை பார்க்கிறது.
''ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய, அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.

