/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குளத்தில் மழைநீர் சேகரிக்கப்படுமா?
/
குளத்தில் மழைநீர் சேகரிக்கப்படுமா?
ADDED : செப் 10, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் திருநாகேஸ்வரர் கோவில், நவக்கிரங்களில் ராகு தலமாக விளங்குகிறது. கோவிலின் எதிரே உள்ள சூரிய புஷ்கரிணி தீர்த்த குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், ராகு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இக்குளத்தின் நீர்வரத்து கால்வாயில், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்ததால், கால்வாய் அடைக்கப்பட்டது. இதனால் நீர்வரத்தின்றி குளம் வறண்டு கிடக்கிறது.
பருவமழை துவங்கும் முன், கால்வாயை சீரமைத்து, குளத்திற்கு தண்ணீர் தேக்க வேண்டும். குடியிருப்புகளில் இருந்து கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
- ராஜேஷ், குன்றத்துார்.

