/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரையிறங்க முடியாத விமானம் மீண்டும் சென்னை திரும்பியது
/
தரையிறங்க முடியாத விமானம் மீண்டும் சென்னை திரும்பியது
தரையிறங்க முடியாத விமானம் மீண்டும் சென்னை திரும்பியது
தரையிறங்க முடியாத விமானம் மீண்டும் சென்னை திரும்பியது
ADDED : ஏப் 01, 2024 01:07 AM
சென்னை:சென்னையில் இருந்து 180 பயணியருடன் அந்தமான் சென்ற தனியார் விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலையால், தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது.
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் தனியார் பயணியர் விமானம், நேற்று பகல் 1:00 மணிக்கு, 180 பயணியருடன், புறப்பட தயாரானது. அந்தமானில் நிலவிய மோசமான வானிலையால், தாமதமாக பிற்பகல் 2:30க்கு புறப்பட்டது.
மாலை 4.30 மணியளவில், அந்தமான் வான்வெளியை நெருங்கியபோது, அங்கு கடுமையான தரைக்காற்று வீசியது. இதனால் தரை இறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது.
வானிலை சீராகாததால், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது விமானத்தை மீண்டும், சென்னைகே திருப்பி வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி அந்த விமானம், 180 பயணியருடன், நேற்று இரவு 7:00 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.
அந்தமான் செல்லும் பயணியர் இதே டிக்கெட்டில், நாளையோ அல்லது விருப்பப்பட்ட வேறு ஒரு நாளிலோ, பயணம் செய்யலாம் என, தனியார் விமான நிர்வாகம் அறிவித்துள்ளது.

