/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கலெக்டர் கணக்கெடுப்பு
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கலெக்டர் கணக்கெடுப்பு
ADDED : ஏப் 05, 2024 12:23 AM

புழல், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் உள்ள அவற்றை, நேற்று காலை கலெக்டர் பிரபு சங்கர், கொளத்துார் காவல் மாவட்ட துணை கமிஷனர் பாண்டியராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு குறித்தும் கலெக்டர் விசாரித்தார்.
'மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்' என, கலெக்டர் பிரபு சங்கர் கூறினார்.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அம்பத்துார் சட்டசபை தொகுதியில், 350 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
அவற்றில், அம்பத்துார் டீச்சர்ஸ் காலனி, பட்டரவாக்கம், மாதனாங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள எட்டு ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றை, அம்பத்துார் மண்டல அலுவலரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கருணாகரன், போலீஸ் கண்காணிப்பு குழுவினர், அம்பத்துார் தாசில்தார் மற்றும் மண்டல அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர்.

