/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மெப்ஸ்' வளாக கழிவுநீர் திருநீர்மலை ஏரியில் கலப்பு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது தீர்ப்பாயம் அதிருப்தி

ADDED : ஏப் 08, 2024 02:28 AM
சென்னை:குரோம்பேட்டை 'மெப்ஸ்' வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுநீரால், திருநீர்மலை ஏரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது.
'மெப்ஸ்' வளாகத்தை ஒட்டியுள்ள துர்கா நகரில் உள்ள காந்தி தெரு, அவ்வை தெரு, புகழேந்தி தெரு, வினோபா தெரு, பிள்ளையார் கோவில் தெரு, திருவள்ளுவர் தெருக்களில், நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்துள்ளது. இப்பகுதிகளில் உள்ள வீட்டு குழாய்களில் நுரையுடன் தண்ணீர் வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, 2023 ஆக., 31ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வரும் தீர்ப்பாயம், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு கடந்த செப்டம்பரில் இருந்து நிலுவையில் உள்ளது. நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கால அவகாசம் கோரியுள்ளார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூலை 2ல் நடக்கும். அதற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இது இறுதி வாய்ப்பாகும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.