/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து: ஏ.டி.எம்., இயந்திரம், 'ஏசி' நாசம்
/
டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து: ஏ.டி.எம்., இயந்திரம், 'ஏசி' நாசம்
டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து: ஏ.டி.எம்., இயந்திரம், 'ஏசி' நாசம்
டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து: ஏ.டி.எம்., இயந்திரம், 'ஏசி' நாசம்
ADDED : ஏப் 26, 2024 12:39 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், கலைஞர் நகர் பிரதான சாலையில் உள்ள மின்மாற்றி வெப்பம் தாங்காமல் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
அப்பகுதி மக்கள் திருவொற்றியூர், எண்ணுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின், திருவொற்றியூர், எண்ணுார் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காவல்துறை உதவியுடன் அருகில் மாடி வீட்டில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
ஏ.டி.எம்.,மிலும், வீடுகளில் இருந்த இரு 'ஏசி' இயந்திரங்களும் தீயில் கருகி சேதமானது.