/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் கோரி மறியல் போக்குவரத்து பாதிப்பு
/
குடிநீர் கோரி மறியல் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 12, 2024 12:21 AM
திருவொற்றியூர், எண்ணுார் சுற்றுவட்டார பகுதிகளில் சில வாரங்களாக, குடிநீர் வினியோகம் சீராக இல்லை. வெயில் காலம் என்பதால், குடிநீர் தேவை அதிகம் உள்ளது.
திருவொற்றியூர், 9வது வார்டு, பட்டினத்தார் மின்மயான சுடுகாடை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில், காலை 7:00 மணிக்கு, குடிநீர் வினியோகம் செய்வது வழக்கம்.
ஆனால், குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்தோர், எண்ணுார் விரைவு சாலையில், நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அச்சாலை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்த, திருவொற்றியூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்தனர்.
மண்டலக் குழு தலைவர் தனியரசு, கவுன்சிலர் உமா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து, லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
திருவொற்றியூருக்கு, தினசரி, 15 மில்லியன் லிட்டர் குடிநீர் வர வேண்டிய நிலையில், 6 - 7 மில்லியன் லிட்டர் அளவே குடிநீர் வருவதால், வினியோகத்தில் சிக்கல் ஏற்படுவதாக, அதிகாரிகள் கூறினர்.

