/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் பறக்கும் படையினரின் வேட்டை கோயம்பேடு வரும் வியாபாரிகள் தவிப்பு
/
தேர்தல் பறக்கும் படையினரின் வேட்டை கோயம்பேடு வரும் வியாபாரிகள் தவிப்பு
தேர்தல் பறக்கும் படையினரின் வேட்டை கோயம்பேடு வரும் வியாபாரிகள் தவிப்பு
தேர்தல் பறக்கும் படையினரின் வேட்டை கோயம்பேடு வரும் வியாபாரிகள் தவிப்பு
ADDED : மார் 27, 2024 12:12 AM
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் மொத்த விற்பனை அதிகாலை 4:00 மணிக்கு துவங்கி பகல் 12:00 மணிவரை நடக்கும்.
இவற்றை வாங்குவதற்கு, சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கின்றனர். பழ மார்க்கெட்டிற்கு ஆந்திரா எல்லையோர கிராமங்களில் இருந்தும் கடலுார், விழுப்புரம், புதுச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
பொருட்களை வாங்க வருவோர் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை எடுத்து வருகின்றனர்.
அதிகாலையில் கோயம்பேடு, மதுரவாயல், வடபழனி, அரும்பாக்கம், விருகம்பாக்கம், பாடி உள்ளிட்ட இடங்களில், இந்த வாகனங்களை மறித்து, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்துகின்றனர்.
பொருட்களை வாங்கிக் கொண்டு செல்லும் பணத்திற்கு ஆவணங்களை கேட்கின்றனர்.
முதல் நாள் கடையில் வசூல் ஆகும் பணத்தைதான் கொண்டு வருகிறோம் என வியாபாரிகள் கூறினாலும், உரிய ஆவணங்களை தரும்படி கூறுகின்றனர். இதனால், பொருட்களை வாங்க முடியாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இப்பிரச்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

