/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீராங்கல் ஓடையில் சகதி, புதர்கள் நீரோட்டம் தடைபடும் அபாயம்
/
வீராங்கல் ஓடையில் சகதி, புதர்கள் நீரோட்டம் தடைபடும் அபாயம்
வீராங்கல் ஓடையில் சகதி, புதர்கள் நீரோட்டம் தடைபடும் அபாயம்
வீராங்கல் ஓடையில் சகதி, புதர்கள் நீரோட்டம் தடைபடும் அபாயம்
ADDED : ஆக 28, 2024 12:37 AM

வாணுவம்பேட்டை,
பருவமழைக் காலத்தில் மழைநீர் துரிதமாக வெளியேறும் வகையில் வாணுவம்பேட்டை பகுதி வீராங்கல் ஓடையில் சேகரமாகியுள்ள சகதி, செடி, கொடிகள் அகற்றப்பட வேண்டும்.
சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட ஆதம்பாக்கம் ஏரியின் உபரிநீர், வேளச்சேரி சதுப்பு நிலம் வழியாக வெளியேறும் வகையில் வீராங்கல் ஓடை அமைந்துள்ளது.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஓடை, ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்பட்டு பல இடங்கள் சுருங்கி காணப்பட்டது. இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், 19.5 கோடி ரூபாய் செலவில் ஆதம்பாக்கத்தில் ஏரி உபரிநீர் வெளியேறும், 'ஷட்டர்' பகுதியில் இருந்து, 1.2 கி.மீ., துாரத்திற்கு ஓடையின் இருபக்கமும் மதில் சுவரும் எழுப்பட்டது.
வீராங்கல் ஓடையின் வாணுவம்பேட்டை பகுதி, சிதம்பரனார் தெரு மற்றும் உள்ளகரம் என்.எஸ்.சி., போஸ் சாலை இணைக்கும் இடத்தில் இருந்த சிறு பாலத்தை அகற்றி, சாலையில் இருந்து 3 அடி உயரத்தில் புதிய பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓடையின் வாணுவம்பேட்டை பகுதியில் அரை கி.மீ., துாரத்திற்கு மேல் சகதி, செடி, கொடி நிறைந்து காணப்படுகிறது. இதனால், மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபடும் அபாயம் உள்ளது.
எனவே, தொடர் மழைக்கு முன் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சகதி, செடி கொடிகளை உடனடியாக அகற்றி, தடையின்றி மழைநீர் செல்ல வழிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

