/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தும் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி இழுபறி
/
ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தும் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி இழுபறி
ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தும் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி இழுபறி
ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தும் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி இழுபறி
ADDED : மே 19, 2024 12:35 AM
சென்னை:சோழவரம் ஏரியின் கரையை பலப்படுத்தும் பணிக்கு, 40 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தும், பணிகள் துவக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, பல்வேறு பகுதிகளின் பாசன தேவையும் பூர்த்தியாகிறது.
இந்த ஏரியின் கொள்ளளவு, 0.88 டி.எம்.சி.,யாக இருந்தது.
இதை, 1 டி.எம்.சி.,யாக உயர்த்தும் பணி, கடந்த 2014ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, 20 கோடி ரூபாயை நீர்வளத்துறை செலவிட்டது.
அதன்படி கரைகளை பலப்படுத்துதல், கலங்கல் உயரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையால், ஏரியில் 300 மீட்டருக்கு விரிசல் ஏற்பட்டது. கரை உடையும் அபாயமும் ஏற்பட்டது.
இதையடுத்து, தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சோழவரம் ஏரி, அணைகள் பட்டியலில் உள்ளதால், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், நீரியல் வல்லுனர்கள் ஆய்விற்குப் பின், கரையை பலப்படுத்தும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதற்காக, 40 கோடி ரூபாய், லோக்சபா தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்பதால், அதற்கு முன்பாக பணிகளை முடிக்க, அரசு அறிவுறுத்தி இருந்தது.
ஆனால், ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
இதனால், அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், கரையை பலப்படுத்தும் பணிகள் துவங்காமல், இழுபறியாக உள்ளது.

