/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலவராயன் குளம் சீரமைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியது பணி
/
பாலவராயன் குளம் சீரமைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியது பணி
பாலவராயன் குளம் சீரமைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியது பணி
பாலவராயன் குளம் சீரமைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியது பணி
ADDED : ஏப் 29, 2024 01:29 AM

குன்றத்துார்:குன்றத்துார் பாலவராயன் குளம் சீரமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
குன்றத்துாரில் பிறந்தவர் சேக்கிழார். இவர் தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் பெருமை சேர்க்கும் நுாலான பெரிய புராணத்தை இயற்றியவர்.
குன்றத்துாரில் சேக்கிழாருக்கு தனிக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே, பாலவராயன் குளம் உள்ளது.
இக்குளம் சேக்கிழாரின் தம்பி பாலவராயன் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் இக்குளம், பாலவராயன் குளம் என பெயர்பெற்றுள்ளது.
இந்த குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்தது. காலப்போக்கில் பராமரிப்பின்றி புதர் மண்டியது. குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுகள், குளத்தில் கலந்து மாசு ஏற்பட்டது.
இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் படத்துடன் செய்திகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், குன்றத்துார் நகராட்சி நிர்வாகத்தினர் இந்த குளத்தை, 2.12 கோடி ரூபாய் மதிப்பில் துார்வாரி நடைபாதை, சுற்றுச்சுவர், மின்விளக்குகளுடன் சீரமைக்கும் பணிகளை கடந்த ஆண்டு துவங்கினர்.
தற்போது இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, குளம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

