/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஜி.ஆர்., பல்கலையில் 'சிமுலேஷன்' ஆய்வகம்
/
எம்.ஜி.ஆர்., பல்கலையில் 'சிமுலேஷன்' ஆய்வகம்
ADDED : ஏப் 03, 2024 12:15 AM
சென்னை, ''மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் மேமம்படுத்தப்பட்ட,' சிமுலேஷன்' ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது,'' என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி கூறினார்.
இதுகுறித்து, துணைவேந்தர் நாராயணசாமி கூறியதாவது:
மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் பயிற்சிக் காலத்தில், நோயாளியிடம் நேரடியாக, ஊசி போடுவது முதல் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு பயிற்சி எடுத்து கொள்கின்றனர்.
இதனால், நோயாளிகளுக்கு 100 சதவீதம் நம்பகமான டாக்டர் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய முடியவதில்லை.
எனவே, நோயாளிகளுக்கு ஊசி போடுவது, அறுவை சிகிச்சை செய்வது உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சை முறைகளை பயிற்சி பெறும் வகையில், 'மெய்நிகர் சிமுலேஷன்' ஆய்வகம், பல்கலை வளாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம், 'சிமுலேஷன்' ஆய்வகத்தை அமைக்க வலியுறுத்தி உள்ளது. இந்த ஆய்வகத்தில் பயிற்சி பெறும் மருத்துவ மாணவர்கள், நேரடியாக நோயாளிகளுக்கே சிகிச்சை அளிப்பதை போன்ற உணர்வு ஏற்படும்.
குறிப்பாக, ஊசி போட்டு போட்டு பழகி, 100 சதவீதம் நம்பகத்தன்மை வந்தவுடன், நோயாளிக்கு போட அனுமதிக்கப்படுவர். இதுபோன்ற, பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளையும், 'சிமுலேஷன்' ஆய்வகத்தில் பயிற்சி பெற முடியும்.
இந்த ஆய்வகம் மருத்துவ பல்கலையில் விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, மருத்துவ பல்கலையின் கீழ் உள்ள பிரதான மருத்துவக் கல்லுாரிகளிலும் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

