/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடையை உடைத்து மொபைல் போன் திருட்டு
/
கடையை உடைத்து மொபைல் போன் திருட்டு
ADDED : ஏப் 26, 2024 12:11 AM
கோயம்பேடு, கோயம்பேடு சந்தை வளாகத்தில் ராஜா, 38, என்பவர், மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு, வீட்டிற்கு சென்றார். இரவில், கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், விலை உயர்ந்த மொபைல் போன்கள் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தையும் திருடி தப்ப முயன்றார்.
அப்போது, அவ்வழியாக சென்ற மூட்டை துாக்கும் கூலி தொழிலாளிகள் சிலர், கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு, அங்கிருந்து தப்ப முயன்ற நபரை பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது, வேலுார் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், 33, என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

