/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எள்ளும், கொள்ளுமாய் வெடித்த கோஷ்டி பூசல் காங்., வேட்பாளர் பிரசாரத்தால் கடும் நெரிசல்
/
எள்ளும், கொள்ளுமாய் வெடித்த கோஷ்டி பூசல் காங்., வேட்பாளர் பிரசாரத்தால் கடும் நெரிசல்
எள்ளும், கொள்ளுமாய் வெடித்த கோஷ்டி பூசல் காங்., வேட்பாளர் பிரசாரத்தால் கடும் நெரிசல்
எள்ளும், கொள்ளுமாய் வெடித்த கோஷ்டி பூசல் காங்., வேட்பாளர் பிரசாரத்தால் கடும் நெரிசல்
ADDED : ஏப் 01, 2024 01:10 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் தனி தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் சசிகாந்த் செந்தில், மணவாள நகர் பகுதியில் நேற்று காலை 8:00 மணிக்கு பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
காலை 7:30 மணியிலிருந்து தி.மு.க., - வி.சி., - கம்யூ., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் அங்கு கூடியிருந்தனர்.
திருவள்ளூர், திருத்தணி, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், சந்திரன், பொன்னேரி காங்., எம்.எல்.ஏ., துரை சந்திரசேகரன், தேர்தல் பொறுப்பாளர் கிரிராஜன் உட்பட பலர், அங்குள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை முன் காத்திருந்தனர்.
காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, காலை 9:27 மணிக்கு அங்கு வந்தார். அவர் வருவதற்கு முன்னதாக 9:18ல் இருந்து அவ்வழியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வந்தவர், அண்ணாதுரை சிலை பக்கம் செல்லாமல், அதற்கு நேராக இருந்த முன்னாள் பிரதமர் இந்திரா சிலைக்கு சென்று, மாலை அணிவித்தார்.
தாமதமாக வந்ததோடு அல்லாமல், நேராக சென்று இந்திரா சிலைக்கு மாலை அணிவித்தது, தி.மு.க.,வினருக்கு ஆத்திரத்தை வரவழைத்தது. இதையடுத்து சசிகாந்த் தி.மு.க.,வினர் நிற்கும் பகுதிக்கு நடந்து வந்தார்.
ஆத்திரத்தில் இருந்த எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கை காட்டி அவரை நிறுத்தி வாகனங்கள் செல்வதற்கு வழிவிட்டார். அப்போது அவர் முகத்தில் கோப கனல் வீசியது.
ஒரு லாரி, ஒரு பேருந்து உள்ளிட்ட சொற்ப வாகனங்கள் சென்றதும், ராஜேந்திரனுடன் நின்றிருந்த எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தி, சசிகாந்த் செந்திலை அழைத்துச் சென்றார்.
இச்சம்பவம், அங்கிருந்த கட்சியினரிடையேயும், வாகன ஓட்டிகளிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியது.
சசிகாந்த், அங்கிருந்து பிரசாரத்தை துவக்கியபோது, அவருடன் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 20க்கும் அதிகமான கார்கள் மற்றும் ஆதரவாளர்கள் என, 1,000த்துக்கும் மேற்பட்டோர் சென்றனர்.
இதனால், திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன.
மணவாள நகர் போலீசார், ஒரு மணி நேரம் போராடி போக்குவரத்தை சீர்செய்தனர்.

