/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பறிமுதல் வாகனங்களை அகற்றி பூங்காவாக மாற்ற கோரிக்கை
/
பறிமுதல் வாகனங்களை அகற்றி பூங்காவாக மாற்ற கோரிக்கை
பறிமுதல் வாகனங்களை அகற்றி பூங்காவாக மாற்ற கோரிக்கை
பறிமுதல் வாகனங்களை அகற்றி பூங்காவாக மாற்ற கோரிக்கை
ADDED : மே 15, 2024 12:25 AM

வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின் கீழ் வீணாகும், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அகற்றி, பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவு அலுவலகங்களில், வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பாடி மேம்பாலத்தின்கீழ் குவிந்து கிடக்கின்றன.
நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின், முறையான ஆவணங்களைக் காண்பித்து, தங்களின் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் எடுத்துச் செல்ல முன்வருவதில்லை. இதனால், பல ஆண்டுகளாக, மேம்பாலத்தின் கீழ், ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை முறையாக அனுமதி பெற்று, ஏலம் விட வேண்டும். ஆனால், அவை ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு கிடப்பதால், மழையிலும், வெயிலிலும், மண்ணோடு மண்ணாக வீணாகி வருகின்றன.
இதனால், பல லட்சம் மதிப்பிலான வாகனங்கள், மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. எனவே, வழக்கு முடிந்த பின், உரியவர்களிடம் ஒப்படைக்கவோ அல்லது ஏலம் விடவோ சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை சீரமைத்து, கிண்டி பூங்கா போன்று மாற்ற அரசு முன்வரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

