/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீரிழிவால் ஆபத்தான நிலை காவேரியில் இளைஞருக்கு மறுவாழ்வு
/
நீரிழிவால் ஆபத்தான நிலை காவேரியில் இளைஞருக்கு மறுவாழ்வு
நீரிழிவால் ஆபத்தான நிலை காவேரியில் இளைஞருக்கு மறுவாழ்வு
நீரிழிவால் ஆபத்தான நிலை காவேரியில் இளைஞருக்கு மறுவாழ்வு
ADDED : மார் 28, 2024 12:20 AM
சென்னை, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இசைக்கலைஞருக்கு, காவேரி மருத்துவமனையில் மேம்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
சென்னையை சேர்ந்த 23 வயது இசைக்கலைஞர், வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். சீரற்ற இன்சுலின் ஊசி மற்றும் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, உயிர்காப்பு தீவிர சிகிச்சை துறை நிபுணர் வெற்றிச்செல்வன், நீரிழிவியல் முதுநிலை நிபுணர் பரணிதரன் ஆகியோர் தலைமையில் டாக்டர்கள், தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர் மேம்பட்ட சிகிச்சையால், அவரது சுவாசம் மற்றும் ரத்த அழுத்தம் சீர் செய்யப்பட்டது.
தற்போது நலமுடன், இசைக்கலைஞராக பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

